அதிமுகவில் உட்கட்சி பூசல்: அண்ணாமலை பேச்சு

1571பார்த்தது
கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசும் போது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம். அதிமுக தனியாக இருந்து ஒரு சீட் கூட ஜெயிக்கவில்லை. எப்படி 30 சீட்டுகள் கிடைக்கும். வேலுமணி , எடப்பாடி பழனிச்சாமி இடையே உட்கட்சி பூசல் இருப்பதாக தோன்றுகிறது. பாஜக இருந்தால் 30 முதல் 35 சீட்டுகள் கிடைத்திருக்கும் என வேலுமணி சொல்லுவது உட்கட்சி பூசல் தான்.

கூட்டணியில் இருந்தால் ஒரு பேச்சு. இல்லை என்றால் ஒரு பேச்சு அதிமுக கோவையில் அனைத்து எம்.எல்.ஏ இருந்தும் ஏன் வெற்றி பெற வில்லை. கோவை மக்கள் அதிமுகவை நிராகரித்து விட்டார்கள். பாஜகவிற்கு காலம் வரும் எனவே தொண்டர்கள் உணர்ச்சி வசபட வேண்டாம் என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி