இன்று கோவை மாநகராட்சி 60 வது வார்டுக்கு உட்பட்ட உப்பிலிபாளையம் பகுதியில், மக்கள் சபை கூட்டம் 60 வது வார்டு மாமன்ற உறுப்பினர்
கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர், சிங்கை மு. சிவா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த வார்டு சபா கூட்டத்தில் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் அடிப்படை பிரச்சனைகள் சமந்தமாக விவாதிக்கப்பட்டு, அந்த பிரச்சனைகள் விரைவில் அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்து சென்று தீர்வு நடவடிகை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கபட்டது.
இறுதியாக இதுவரை 60 ஆவது வார்டு பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற பணிகள், மற்றும் நடைபெற போகும் பணிகள் குறித்த விவரங்கள் பொதுமக்களிடம் பகிர்ந்து கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் திமுகவின் சிங்கை பகுதி -2 அவைதலைவர் கே. பி ராமகிருஷ்ணன், 60 வதுவட்ட செயலாளர் செம்மொழி முருகானந்தம், கோவை மாநகர் மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஜெயராம், நகர் நலச்சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.