கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து போராட்டம் நடத்தினர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் (74), மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் (74) மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது தபால் தந்தி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து ஒன்றிய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதனால் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் முத்தரசன் மற்றும் ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன்(59), உட்பட கட்சியினர் மீது சட்ட விரோதமாக ஒன்று கூடி போராட்டம் செய்ததாக வழக்குப்பதிவு செய்தனர்.