கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. அதன்படி கோவை மாவட்டத்தில் பெய்த மழை அளவின் விவரம் மீ. மீட்டரில் வருமாறு: வேளாண் பல்கலைக்கழகம் - 15. 60, பெரியநாயக்கன்பாளையம் - 2, மேட்டுப்பாளையம் - 21, பில்லூர் அணை - 13, அன்னூர் - 1. 40, கோவை தெற்கு - 5. 60, சூலூர் - 9, வாரப்பட்டி - 6, தொண்டாமுத்தூர் - 48, சிறுவாணி அடிவாரம் - 85, மதுக்கரை தாலுக்கா - 17, போத்தனூர் ரயில் நிலையம் - 15, பொள்ளாச்சி தாலுக்கா - 84, மாக்கினாம்பட்டி - 19, கிணத்துக்கடவு - 19, ஆனைமலை - 38, ஆழியார் - 61, சின்கோனா - 232, சின்னக்கல்லாறு - 239, வால்பாறை பிஏபி - 194, வால்பாறை தாலுக்கா - 192, சோலையாறு - 185 என மொத்தம் கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டத்தில் 1575 மி. மீ மழை பொழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.