சற்றுமுன் வால்பாறை காந்தி சிலை சாலையில் வாகன நெரிசல்.
கோவை மாவட்டம் வால்பாறை தாலுகா பகுதிக்கு உட்பட்ட வால்பாறை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து இன்று குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டு வருவதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது மற்றும் வால்பாறையில் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் இல்லாமல் அலைமோதும் சுற்றுலா பயணிகள். இதனால் காந்தி சிலை சாலை இருபுறமும் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது மற்றும் வால்பாறை காவல்துறையினர் வாகனங்களை அப்புறப்படுத்துவதற்கு பொதுமக்கள் இன்று கோரிக்கை வைத்துள்ளனர் இதனால் சாலையில் நடந்து போவதற்கு இடம் இல்லாமல் மக்கள் அவதி. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் வால்பாறை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகள் வால்பாறை நகராட்சி ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் வால்பாறை பகுதிகளில் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் வசதி செய்து தருவதற்கு சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.