பொள்ளாச்சி அருகே உள்ள தாத்தூரில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் தலையில் கல்லை போட்டு சகலையை கொலை செய்த கட்டிட தொழிலாளி தலைமறைவு- ஆனைமலை போலீசார் விசாரணை
பொள்ளாச்சி அருகே உள்ள தாத்தூர் பகுதியில் வசித்து வந்தவர் உன்னிகிருஷ்ணன் இவரது மனைவி கவிதா இவர்கள் இருவரும் கடந்து இரண்டு வருடங்களாக பிரிந்து தனித்தனியாக குடியிருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் உன்னிகிருஷ்ணனின் மனைவி கவிதாவின் தங்கையான அதே பகுதியில் வசிக்கும் சத்யாவின் கணவர் சசிகுமாரும், உன்னிகிருஷ்ணன் இருவரும் இன்று மதியம் மது அருந்தி உள்ளனர்.
அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது, இதில் தகராறு முற்றி போய் உன்னிகிருஷ்ணன் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு சசிகுமார் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சம்பவம் அறிந்து வந்த ஆனைமலை போலீசார் உன்னி கிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர், உன்னிகிருஷ்ணனின் மனைவி கவிதாவுக்கும், கொலை செய்த சசிகுமாருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வருவதாகவும், இதில் ஏற்பட்ட தகராறில் உன்னிகிருஷ்ணனை சசிகுமார் கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனிடையே தலைமறைவான சசிகுமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.