மாணவனை அடித்த தமிழ் ஆசிரியர் கைது!!

70பார்த்தது
மாணவனை அடித்த தமிழ் ஆசிரியர் கைது!!
பொள்ளாச்சி அருகே உள்ள லதாங்கி மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடந்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியின் தமிழ் ஆசிரியர் ஒருவர், புறநானூறு செய்யுளை மாற்றி எழுதிய 12ஆம் வகுப்பு மாணவரை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் உள்ள இந்த தனியார் பள்ளியில், கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. தமிழ் ஆசிரியர் சுரேஷ்குமார், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தும் போது, புறநானூறு செய்யுளை எழுதுமாறு கூறினார். அப்போது, 17 வயதான ஒரு மாணவர் அந்த செய்யுளை மாற்றி எழுதியதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த ஆசிரியர் சுரேஷ்குமார், அந்த மாணவரின் கன்னத்தில் அறைந்து, வயிற்றுப் பகுதியில் குத்தி, தேர்வு எழுதும் அட்டையால் முதுகில் அடித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வலி தாங்க முடியாமல், பாதிக்கப்பட்ட மாணவர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவர் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், போலீசார் ஆசிரியர் சுரேஷ்குமாரை கைது செய்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். பின்னர் அவரை நீதிமன்றக் காவலில் வைத்து, சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி