தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினர் ஆர்பாட்டம்

83பார்த்தது
பாராளுமன்றத்தில் கூட்டத்தில் ஜாதி வாரிய கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி பேசிய போது மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் என்ன ஜாதி என ராகுல் காந்தியை விமர்சித்துள்ளார். இதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் தெற்கு மாவட்ட தலைவர் பகவதி தலையில் பாராளுமன்றத்தில் ராகுல் காந்தியை விமர்சனம் செய்த மத்திய அமைச்சரை கண்டித்தும், பிரதமர் மோடியை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அமைச்சரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி