வருவாய்த்துறை அலுவலர் சங்க ஊழியர்கள் போராட்டம்

76பார்த்தது
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து பணிகளையும் புறக்கணித்து பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் ஈடுபட்டாள்ளனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க ஊழியர்கள், துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணை உடனே வெளியிட வேண்டும். ,
இளநிலை வருவாய், முதுநிலைவருவாய் ஆய்வாளர், பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதித்தெரிந்த ஆணையினை உடன் வெளியிட வேண்டும்,
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்கிட வேண்டும் என 10 கோரிக்கைகளை வழியுறுத்தி காத்திருக்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
இந்த போராட்டத்தின் மூலம் அரசு நடவடிக்கை எடுக்க விட்டால் வரும் 27ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி