மேட்டுப்பாளையம்: காட்டு யானை பாகுபலி- சாலையில் பரபரப்பு!

82பார்த்தது
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் காட்டு யானை பாகுபலியின் ஆக்ரோஷ நடமாட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக மஸ்த்துடன் சுற்றித் திரியும் இந்த யானை, நேற்று இரவு சாலையில் சென்ற காரின் கண்ணாடியை உடைத்துள்ளது. கோவை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த பல மாதங்களாக பாகுபலி என்ற ஒற்றை காட்டு யானையின் நடமாட்டம் தொடர்ந்துள்ளது. விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதோடு, மக்களையும் அச்சுறுத்தி வருகிறது. மஸ்த்துடன் சுற்றித் திரியும் பாகுபலி, நேற்று இரவு மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் இரண்டாவது கொண்டை ஊசி வளைவு அருகே உலா வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். யானையின் ஆக்ரோஷத்தால் ஒரு காரின் கண்ணாடி உடைந்தது. மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின், பாகுபலி மஸ்த்துடன் இருப்பதால் மிகவும் ஆக்ரோஷமாக இருப்பதாக தெரிவித்தார். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் யானையை கண்டால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், அருகில் செல்லவோ புகைப்படம் எடுக்கவோ கூடாது என்றும் எச்சரித்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி