போலி அடையாள அட்டை பயன்படுத்தி 290 சிம்கார்டுகளை விற்பனை செய்தவர் கைது

758பார்த்தது
போலி அடையாள அட்டை பயன்படுத்தி 290 சிம்கார்டுகளை விற்பனை செய்தவர் கைது
*போலி அடையாள அட்டை பயன்படுத்தி 290 சிம்கார்டுகளை விற்பனை செய்த நபர்களை கைது செய்த கோவை மாவட்ட காவல்துறையினர்*

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடமிருந்து
பெறப்பட்ட தகவல்களின் படி, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு. பத்ரி நாராயணன், இ. கா. ப. , * அவர்கள் உத்தரவின் பேரில், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் RANA COMMUNICATIONS என்ற பெயரில் 4 நபர்களின் போலி அடையாள அட்டை பயன்படுத்தி *290 சிம்கார்டுகளை* விற்பனை செய்த பொள்ளாச்சியை சேர்ந்த நடராஜன் மகன் *ராம்குமார் (37)* மற்றும் செல்வராஜ் மகன், *ராமசுப்பிரமணியன் (41)* ஆகிய இருவரையும் கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

பொதுமக்கள் தங்களது அடையாள அட்டைகளை அறிமுகம் இல்லாத நபர்களிடம் கொடுக்க வேண்டாம். நாம் உபயோகிக்கும் சிம் கார்டு எண்களை வாங்கும் போது, பிறர் ஆவணங்களில் வாங்காமல் அவரவர் ஆவணங்களை பயன்படுத்தி வாங்கினால் குற்ற வழக்குகளை தவிர்க்கலாம் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரை வழங்கியுள்ளார்.

இணையதளம் மூலமாக உங்களது பணத்தை இழந்து விட்டால் *1930* என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் என்றும் சைபர் கிரைம் புகார்களுக்கு *www. cybercrime. gov. in* என்ற இணையதள முகவரியில் பதிவு செய்தால் *கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர்* உங்களை தொடர்பு கொண்டு நீங்கள் இழந்த பணத்தை மீட்டுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி