கோவை பாலக்காடு சாலை பாலதுரை பகுதியில் இயற்கை சூழல் நிறைந்த பண்ணை தோட்டத்தில் புதிதாக அமைந்துள்ள கௌரவம்மாள் ஆதரவற்றோர் இல்லம் திறப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனை கௌரவம்மாள் ஆதரவற்றோர் இல்லம் நிர்வாக இயக்குனர்கள் முனிசாமி, சபஸ்டியன் மற்றும் சுந்தரம் ஆகியோர் இணைந்து நடத்தி வருகின்றனர். இங்கு 60 முதல் 70 வயதுக்கும் மேற்பட்ட வீட்டில் கைவிடப்பட்ட முதியவர்கள், சாலையோர முதியோர்களை அழைத்து வந்து விசாரித்த பின்னர் இங்கு சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து, கௌரவம்மாள் ஆதரவற்றோர் இல்லம் நிர்வாக இயக்குனர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவை மதுக்கரை பாலத்துறை பகுதியில் இயற்கை சூழல் நிறைந்த பகுதியில் கௌரவம்மாள் ஆதரவற்றோர் இல்லம் என்ற பெயரில் ஆதரவற்றோர் இல்லத்தை எங்களது சொந்த செலவில் கட்டி முடித்துள்ளோம். அரசாங்கம் பதிவில் கௌரவம்மாள் ஆதரவற்றோர் இல்லம் தற்போதை திறக்கப்பட்டுள்ளது. இங்கு மற்ற ஆதரவற்றோர் இல்லங்களுக்கு மாற்றாக முதியவர்கள் தங்கள் வீட்டில் இருப்பதை போன்று கௌரவம்மாள் ஆதரவற்றோர் இல்லத்தில் பசுமை பூங்காவுடன், டிவி வசதி, கட்டில் மெத்தையுடன் ஏசி ரூம்கள், ஹீட்டர் வசதியுடன் கழிவறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்துள்ளோம். இவர்களுக்கு தேவையான உணவு மற்றும் இதர செலவுகளுக்கு தன்னார்வர்கள் முன்வந்து உதவ வேண்டும். மேலும் தொடர்புக்கு 9698961993 என்ற எண்ணை அழைக்கலாம் என தெரிவித்தார்.