காந்திபுரம்: ஆட்டோ ஸ்டாண்டில் டிரைவருக்கு கத்திக்குத்து

72பார்த்தது
காந்திபுரம்: ஆட்டோ ஸ்டாண்டில் டிரைவருக்கு கத்திக்குத்து
கோவை கணபதி மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (61), ஆட்டோ டிரைவர். இவர், காந்திபுரம் ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இதே ஸ்டாண்டில் காந்திபுரத்தை சேர்ந்த பரசுராமன் (37) என்பவரும் ஆட்டோ ஓட்டி வருகிறார். 

இந்நிலையில், சீனிவாசனின் அக்காள் மகன் ராஜன் என்பவரும், பரசுராமனும் நண்பர்களாக பழகினர். இது சீனிவாசனுக்கு பிடிக்கவில்லை. பரசுராமன் நடவடிக்கை அவருக்கு பிடிக்காததால் தனது அக்காள் மகன் ராஜனுடன் பழக வேண்டாம் என கண்டித்தார். இதையடுத்து, பரசுராமனுக்கு, சீனிவாசன் மீது கடும் ஆத்திரம் ஏற்பட்டது. 

இந்நிலையில், நேற்று முன்தினம் (பிப்ரவரி 2) சீனிவாசன் நஞ்சப்பா ரோட்டில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் இருந்தார். அப்போது, அங்கு வந்த பரசுராமனுக்கும், சீனிவாசனுக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த பரசுராமன் தகாத வார்த்தைகளால் பேசி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சீனிவாசனை சரமாரியாக குத்தி விட்டு தப்பி சென்றார். காட்டூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிந்து பரசுராமனை கைது செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி