பொள்ளாச்சியை அடுத்துள்ள கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் அமெரிக்கா இந்திய பவுண்டேஷன் சார்பில் ஸ்டெம் கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு மையத்தை திறந்து வைத்தனர், பின்னர் மாணவர்களிடையே அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில். , சமுதாயத்தில் என்ன கற்றுக் கொண்டு இருக்கிறோமோ அதை திருப்பி சமுதாயத்திற்கு கொடுக்க வேண்டும் என்பது நமது கடமை என்றும், நாம் படித்தோம், நாம் சம்பாதித்தோம், நன்றாக இருக்கிறோம் என்று என்னாமல் , இந்த சமுதாயத்திற்கு நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை நினைக்கும் மாணவர்களாக உருவாக வேண்டும், பாடம் நடத்திக் கொண்டே இருந்தால் சலிப்பு ஏற்படும், இதனால் கற்றல் திறனை, செயல் திறனை அதிகரிக்க வேண்டும் அதற்கு மாணவர்களின் முழு ஒத்துழைப்பு தேவை என்றும், கற்றல் திறன் அதிகரித்தால் தேர்வு எழுதும் போது உதவியாக இருக்கும், பள்ளிக்கூடம் என்பது உங்கள் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளும் இடமாக இருக்க வேண்டும் என்று பேசினார்.