2025 ஆம் ஆண்டிற்கான உலக புற்றுநோய் தினத்தைக் அனுசரிக்கும் விதமாக, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை - ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் நேற்று பொதுவான புற்றுநோய்கள் குறித்த தகவல்கள் அடங்கிய புதுமையான டிஜிட்டல் ஃபிளிப் புக் மற்றும் ஒரு மாத கால இலவச புரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனைத் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டது. கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கே. கார்த்திகேயன் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு, எஸ். என். ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர். சுந்தருடன் சேர்ந்து, இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன், ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் பி. குகன்; ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே. கார்த்திகேஷ்; மற்றும் பிற விருந்தினர்கள் முன்னிலையில், ஃபிளிப் புக் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனைத் திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தனர்.