கோவை: சாலை விவகாரம்- பொதுமக்கள் போராட்டம்

56பார்த்தது
சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட நாகையன் தோட்டம் செல்லும் சாலை கடந்த ஐந்து ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல், மழைக்காலங்களில் கடுமையாக சேறாக மாறுகிறது. இதனால் பொதுமக்கள், பள்ளி குழந்தைகள், ஆம்புலன்ஸ் போக்குவரத்து உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
சாலை சீரமைப்பிற்காக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற காரணத்தால், இன்று அதிகாலை 50-க்கும் மேற்பட்டோர் சேதமடைந்த சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் திருச்சி சாலையை மறிய முயன்ற பொழுது, போலீசார் தடுத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
வட்டாட்சியர் நேரில் வந்து, சாலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தீர்ப்புக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தற்காலிக சீரமைப்பு குறித்து பேரூராட்சியிடம் பேசுவதாக உறுதி அளித்தார். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்துச் சென்றனர். சாலை சீரமைப்பில் நிரந்தர தீர்வு தேவை என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி