கோவை: கழிவுநீரால் மாசடைந்துள்ள குளங்கள்!

70பார்த்தது
கோவை சூலூரில் உள்ள பெரிய குளம் (100 ஏக்கர்) மற்றும் சின்ன குளம் (80 ஏக்கர்) ஆகியவை, கடந்த 20 ஆண்டுகளாக நொய்யல் ஆற்றில் இருந்து வருகிற கழிவுநீரால் மாசடைந்துள்ளன. இதனால் நிலத்தடி நீர் மாசடைந்து, விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள், தன்னார்வலர்கள் மற்றும் அமைப்புகள் பல ஆண்டுகளாக குளங்களைத் தூர்வார வேண்டுமென கோரி வருகின்றனர். இது குறித்து மனு அளித்த இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் ராஜ்குமார், குளங்களை தூர்வார தவறுவது விவசாயப் பொருட்கள் மற்றும் மக்கள் நலனுக்கு தீங்கு விளைவிப்பதாக தெரிவித்தார். ஆனால், நீர்வளத்துறை அதிகாரிகள் தற்போது குளங்களில் நீர் உள்ளதால் தூர்வார இயலாது என பதிலளிக்கின்றனர். மழைநீர் சேகரிப்பதற்கான கோரிக்கைக்கும் அதிகாரிகள் பொதுவான பதில்களையே அளிக்கின்றனர். ஒவ்வொரு முறையும் பருவமழைக்கு முன் தூர்வார வேண்டும் எனக் கோருகிறோம். ஆனால் எதுவும் நடைபெறவில்லை என மனுவழங்கிய விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி