கோவை: மின் விபத்து அபாயம்

54பார்த்தது
கோவை: மின் விபத்து அபாயம்
கோவை-திருச்சி சாலை நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே, ரேஸ்கோர்ஸ் சாலை சந்திப்பிற்கு எதிரே அமைந்துள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தில் உள்ள மின்மாற்றி (டிரான்ஸ்ஃபார்மர்) மீது, சாலையோரம் நின்ற இணையதள வயர் கம்பம் ஒன்று சாய்ந்து கிடக்கிறது. இதனால் மின் வயர்கள் மீது உரசல் ஏற்பட்டு, அப்பகுதியில் மின் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இந்த இணையதள வயர் கம்பத்தை தொட்டால் மின் விபத்து ஏற்பட்டு பெரும் அசம்பாவிதங்கள் நிகழலாம் என பொதுமக்கள் அஞ்சுகின்றனர். எனவே, மின்மாற்றி மீது சாய்ந்து நிற்கும் இந்த கம்பத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, அப்பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தொடர்புடைய செய்தி