கோவை: லாட்டரி சீட்டுகள் விற்பனை; ஒருவர் கைது

54பார்த்தது
கோவை: லாட்டரி சீட்டுகள் விற்பனை; ஒருவர் கைது
பொள்ளாச்சி அருகே கேரள மாநில லாட்டரி சீட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். பொள்ளாச்சி உட்கோட்ட காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பொள்ளாச்சி - பாலக்காடு சாலையில் உள்ள கோபாலபுரம் சோதனைச் சாவடி அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது, அந்த வழியாக வந்த ஒரு நபரை நிறுத்தி சோதனை செய்ததில், அவரிடம் கேரள மாநில லாட்டரி சீட்டுகள் இருப்பது தெரியவந்தது.விசாரணையில், அவர் அணைமலை சின்னம்பாளையத்தைச் சேர்ந்த ராஜா உடையார் (61) என்பது தெரியவந்தது. 

மேலும், அவரிடம் இருந்து 51 கேரள மாநில லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, ராஜா உடையாரை காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி