கோவை காந்திபுரத்தில் 50 ரூபாய் தொடர்பான தகராறில் கட்டிடத் தொழிலாளி தினேஷை செங்கலால் அடித்து கொலை செய்தார் நண்பர் சரவணன். மதுபோதையில் ஏற்பட்ட வாக்குவாதம் கொலைக்கு வழிவகுத்தது. கொலைக்குப் பிறகு தலைமறைவான சரவணனை, பல்வேறு இடங்களில் தேடிய போலீசார், கரும்புக்கடையில் பதுங்கியிருந்த அவரை நேற்று (மே 31) கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.