கோவை: படகிலிருந்து தவறி விழுந்த மீனவர் உயிரிழப்பு

667பார்த்தது
கோவை: படகிலிருந்து தவறி விழுந்த மீனவர் உயிரிழப்பு
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகிலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராமேஸ்வரம், நாகநாச்சி தேவர் நகரைச் சேர்ந்த 47 வயதான கண்ணன், கடந்த மே 27-ஆம் தேதி ராமேஸ்வரம் கடலில் தனது படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் படகிலிருந்து கடலில் தவறி விழுந்தார். அவரை மீட்ட சக மீனவர்கள், கீழே விழும்போது படகு மீது மோதியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதைக் கண்டனர். உடனடியாக அவர் ராமேஸ்வரத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி