2019ஆம் ஆண்டு கோவையில் உள்ள எஸ்.எஸ்.குளம் பகுதியில் உள்ள ஒரு மருந்துக்கடையில் மருந்து கட்டுப்பாடு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட பக்கவாதம் மற்றும் வலிப்பு நோய்க்கான மருந்துகள் தரமற்றவையாகவும், உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வேதிப்பொருள் கலக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, மருந்து நிறுவனத்தின் பொது மேலாளர் பிரிஜிலால் சர்மா மற்றும் பங்குதாரர் சந்திப் சர்மா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின் போது பிரிஜிலால் சர்மா உடல்நறைவால் இறந்து போனார்.
கோவை 2வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்ற இந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதி ரகுமான், சந்திப் சர்மாவுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் ஒரு மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.