தமிழக அரசின் நேற்றைய (டிசம்பர் 29) திடீர் உத்தரவின்படி, கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ் சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் நிர்வாகப் பிரிவில் ஐ.ஜி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக கோவை சரக டி.ஐ.ஜி யாக பணியாற்றி வரும் சரவண சுந்தர் ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்று கோவை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாற்றங்களுடன், கோவை மாநகர வடக்கு துணை ஆணையர் ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டம் காவல் கண்காணிப்பாளராகவும், சென்னை லஞ்ச ஒழிப்புத் துறையில் காவல் கண்காணிப்பாளராக இருந்த தேவநாதன் கோவை மாநகர வடக்கு துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கோவை மாநகர துணை ஆணையர் சரவணகுமார் சென்னை தெற்கு மண்டலம் பொருளாதார குற்றப்பிரிவில் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தவிர, தமிழகத்தில் மொத்தம் 56 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.