கோவை இருகூர் பைபாஸ் சாலையில் மருத்துவர் ராஜேந்திரன் நிறுவிய புக்ரா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேற்று திறந்து வைத்தார். விழாவில் ஈஸ்வரன், எம். பி. கணபதி ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 150 படுக்கைகள், நவீன வசதிகள் கொண்ட இம்மருத்துவமனை, குறைந்த கட்டணத்தில் உயர்தர சிகிச்சையை வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ளது.
இருதயவியல், எலும்பு, குடலியல் சிகிச்சைகள் வழங்கப்படும் என்றும் அரசு காப்பீடு திட்டங்கள் செயல்படும் என்றும் அதன் நிறுவனர் தெரிவித்துள்ளார்.