சென்னையில் உள்ள புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் திருவள்ளுவர் திடலில் பாலியல் வன்கொடுமையை கண்டித்தும் சட்டம் ஒழுங்கு காப்பாற்ற தவறியதை கண்டித்தும் கோவை புறநகர் தெற்கு மாவட்டம் சார்பாக முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளரும், கொரடாவுமான எஸ்பி வேலுமணி தலைமையில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அதிமுக தலைமை நிலையம் எஸ். பி வேலுமணி கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் சி. தாமோதரன் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஆயிரத்துக்கு மேற்பட்ட அதிமுகவினரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து உடுமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.