கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையத்தில் இருசக்கர வாகனம் ஆம்னி வேனுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் ஹரிஷ் என்பவர் தூக்கி வீசப்பட்டார். ஹரிஷும் அவரது நண்பர் சஞ்சிதும் இருசக்கர வாகனத்தில் அன்னூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, சாலையை கடக்க வந்த ஆம்னி வேனில் மோதினர்.
விபத்தில் இருவரும் காயமடைந்து, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டனர். சம்பவம் தொடர்பாக சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து சம்பவம் அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கின்றன.