பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் 958 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாகும்,
இதில் பொள்ளாச்சி வால்பாறை மானாம்பள்ளி உலாந்தி அமராவதி உடுமலை என ஆறு வரச்சரகங்கள் உள்ளன.
யானை, காட்டெருமை, மான், புலி, சிறுத்தை உட்பட அரிய வகை வனவிலங்குகள் வசிப்பதால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது, இந்நிலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் வன விலங்குகளால் பொதுமக்களுக்கு மிகுந்த பொருள் சேதமும் உயிரிழப்பும் ஏற்படுகிறது,
இதனை அடுத்து பொள்ளாச்சி மற்றும் உலாந்தி வனச்சரகத்திற்கு உட்பட்ட 13 மலையோர கிராமங்களில் வன உயிரின மேலாண்மை பயிற்சி மையம் சார்பில் மனித வன உயிரின முரண்பாடு குறித்த விழிப்புணர்வு நாடகங்கள் நேற்று நடத்தப்பட்டது
இதில் வனவிலங்குகள் நடமாடும் பகுதியில் ஆடு மாடுகள் மேய்ப்பதை தவிர்க்கவும், தாக்க முற்படும் வனவிலங்குகளிடம் இருந்து உயிரை காத்துக் கொள்வது குறித்து நாடகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது, பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு நாடகத்தை கண்டு ரசித்தனர்.