கோவை, ஆனைமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள மீனாட்சிபுரம் காவல்துறையினர் அவ்வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சந்தேகத்தின் பேரில் சோதனை மேற்கொண்ட போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த முகமது ஷபீல் (39) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 5 லட்சம் மதிப்புள்ள 1200 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்து அவரை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர்.