அமமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு குறிச்சி பகுதியில் அன்னதானம் நிகழ்ச்சி
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு குறிச்சி பகுதியில் உள்ள ஸ்ரீ பொங்காளி அம்மன் திருக்கோயிலில் அன்னதானம் நிகழ்ச்சி காலை நடைபெற்றது.
நிகழ்ச்சியானது, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் எம். பி சுகுமார் தலைமையில், குறிச்சி பகுதி செயலாளர் சாகுல் ஹமீது ஏற்பாட்டில் நடைபெற்ற அன்னதானம் நடைபெற்றது. இதில் ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் குறிச்சி மணிமாறன், சுந்தராபுரம் பகுதி கழக செயலாளர் பாசறை ரமேஷ், என் ஆறுமுகம், மயில்சாமி, முகமது அலி, சத்தியமூர்த்தி, முரளி, ராஜ்குமார், மாயப்பன், கேபிள் பழனி, அரவான் செந்தில், நாகேந்திரன், ரமேஷ், மணிவண்ணன், எம்ஜிஆர் நேசன் அன்பு சரிப், பிரபு மற்றும் கோவை தெற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.