பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டி கிராமத்தில் அண்ணா தெருவில் அன்பழகன் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார், இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர், மகன் ஹரிஹரசுதன் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார், நேற்று இரவு ஹரிஹரசுதன் தனது வீட்டின் மறு அறையில் தனது ஆசை நாய்க்குட்டியுடன் இரவில் தூங்கிக் கொண்டிருந்தார், பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் அருகில் இருந்த சுவர் இடிந்து விழுந்ததில் ஹரிஹரசுதன் மற்றும் அவரது ஆசை நாய்க்குட்டியும் உயிரிழந்தது, இடிந்து விழுந்த சத்தம் கேட்டு அன்பழகன் மற்றும் அருகில் இருந்தவர்கள் பார்த்தபோது சுவர் இடிந்தது தெரியவந்தது இதை அடுத்து ஹரிஹரசுதன் உடல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரதே பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். மேலும் சம்பவம் குறித்து கோமங்கலம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,