தொழில் முனைவு, சிறு வணிகம் மேலாண்மை குறித்த கருத்தரங்கு

65பார்த்தது
தொழில் முனைவு, சிறு வணிகம் மேலாண்மை குறித்த கருத்தரங்கு
கோவைப்புதூர், வி. எல். பி ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் மற்றும் ஆராய்ச்சித் துறை சார்பாக, தொழில் முனைவு மற்றும் சிறு வணிகம் மேலாண்மை குறித்த விரிவுரையை இன்று (01. 08. 2024) ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் டாக்டர் பி. சதீஷ்குமார் தலைமை ஏற்றார். விக்டஸ் நிறுவனத்தைச் சார்ந்த தொழிலதிபர் எஸ். பூஜா தர்ஷினி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அவர் தனது சிறப்புரையில், ஒரு சிறு வணிகத்தை தொடங்குதல் மற்றும் நிர்வாகிப்பதற்கான சவால்கள் குறித்தும், தயாரிப்பு மேம்பாட்டில் படைப்பாற்றலையும் அதில் உள்ள புதுமை குறித்தும், சந்தை இடைவெளிகளைக் கண்டறிதல் பற்றிய அறிவையும், மேலாண்மைத் திறன்கள் குறித்தும் விவாதித்தார். மேலும் வணிக சவால்களை சமாளிக்கத் தேவையான உந்துதலையும் அவர் தெளிவுபடுத்தினார். இந்த நிகழ்ச்சியில் துறைத் தலைவர் சுலேகா வரவேற்பு வழங்கினார். உதவிப் பேராசிரியர் நித்தியானந்தம் சிறப்பு விருந்தினர் அறிமுகம் வழங்கினார். முதுகலை வணிகவியல் மாணவி தீபிகா நன்றி வழங்கினார்

தொடர்புடைய செய்தி