சரவணம்பட்டி பகுதி செயலாளர் சிரவை சிவா பேட்டி

55பார்த்தது
இந்தியாவில் நடைபெற்று முடிந்த 18-வது மக்களவை தேர்தலின் முடிவுகள் இன்று காலை முதல் வெளியிடப்பட்டு வந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வென்றுள்ளது.

தமிழக முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு. க. ஸ்டாலின் தேர்தலில் பங்கேற்ற கூட்டணி கட்சிகள், தோழமை அமைப்புகளுக்கும் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்தார். இந்நிலையில் இன்று மாலை தமிழகம் முழுவதும் இந்திய கூட்டணி கட்சிகள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவையில் பாஜக தேசிய தலைவர் அண்ணாமலையை ஒரு லட்சத்திற்கும் மேலான அதிக வாக்குகளில் கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றுள்ளார். இதனை கொண்டாடும் விதமாக, கோவை சரவணம்பட்டி 11வது வார்டு மாமன்ற உறுப்பினர், சரவணம்பட்டி பகுதி செயலாளர், மற்றும் மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான சிரவை சிவா என்கிற பழனிச்சாமி தலைமையில் சரவணம்பட்டி பகுதிக்குட்பட்ட சிவானந்தபுரம், LGB நகர், விநாயகபுரம், ஜனதா நகர் என பல்வேறு பகுதிகளில் இந்திய கூட்டணி கட்சியுடன் இணைந்து பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் பொது மக்களுக்கு நன்றி தெரிவித்தனர். இதில் வட்டக் கழகச் செயலாளர் யாஸ்மின்சேட், 21வது வார்டு பூங்கொடி சோமசுந்தரம் மற்றும் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியை சார்ந்தவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி