மேட்டுப்பாளையம்: குடிநீர் விநியோகத்தில் குளறுபடி

50பார்த்தது
மேட்டுப்பாளையம்: குடிநீர் விநியோகத்தில் குளறுபடி
மேட்டுப்பாளையம் - அன்னூர் மெயின் ரோடு உட்கான் நகரில், வீடுகளுக்கு 4 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்த குடிநீர் விநியோகம் தற்போது 12 நாட்களுக்கு ஒருமுறை என குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித உரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில், ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று திடீரென சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னகாமண்ணன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி