லயன்ஸ் கிளப் எலைட் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

76பார்த்தது
கோவை ஏ. டி. டி காலனி பகுதியில் தனியார் அரங்கில் லயன்ஸ் இன்டெர்நெஷனல் 324டி மாவட்டத்தின் லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் எலைட் 2024-25ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் உடனடி தலைவர் ராஜேஷ் கண்ணா வரவேற்புரை வழங்கினார். புதிய நிர்வாகிகளை முன்னாள் மாவட்ட ஆளுநர் வின்சென்ட் தேவராஜ் அறிமுகம் செய்து வைத்தார். லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் எலைட் 2024-25ம் ஆண்டின் புதிய நிர்வாகிகளாக தலைவர் சதீஷ்குமார், செயலாளர் சசி நாராயணன், பொருளாளர் கிரிதரன் ஆகியோருக்கு முன்னாள் மாவட்ட ஆளுநர் ரவிச்சந்திரன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் மாவட்ட ஆளுநர் சண்முகசுந்தரம் கலந்து கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து சேவை திட்டத்தினை குறித்து முன்னாள் மாவட்ட ஆளுநர் பாலகிருஷ்ணன் பேசினார். இந்த ஆண்டு லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் எலைட் சார்பில் ரத்ததான முகாம், கண் சிகிச்சை முகாம், கண் தானம் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி போன்ற சேவை திட்டமாக செயல்படுத்த உள்ளனர். மேலும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு ரூபாய் 10 ஆயிரம் கல்வி உதவி தொகை மற்றும் எட்டு வயது சிறுவனுக்கு மருத்துவ செலவிற்காக ரூபாய் 26 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை டி. சி எம். கே ராஜேஷ் மற்றும் அலாலசுந்தரம் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

தொடர்புடைய செய்தி