தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 2026 தேர்தல் வியூகத்தின் அடிப்படையில், இயக்கத்தில் பொறுப்புகளில் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று கோவை மண்டலத்தின் மறுசீரமைக்கப்பட்ட இயக்க நிர்வாகிகளுடன் கூட்டம் நடைபெறுகிறது.
நேற்று சென்னை மண்டலத்தில் இதனை துவங்கினேன். நாளை காலை மதுரை மண்டல கூட்டம் நடைபெற உள்ளது. நாளை மாலை திருச்சி மண்டல கூட்டம் நடைபெறுகிறது.
நான்கு மண்டல கூட்டங்கள் நாளையோடு நிறைவடைகிறது. இந்த கூட்டத்தின் நோக்கமாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயார் நிலையில் செயல்படுவதற்கான பணிகளை, இயக்க வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொள்வதற்காக இந்த மறுசீரமைப்பு மற்றும் கூட்டங்கள் நடத்தப்படுகிறது.
இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட தலைமை என மாற்றி மறு சீரமைக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து நிர்வாகிகளும் ஏற்றுக்கொண்டுள்ளனர். பிற கட்சிகளும் இதே நிலைப்பாடு எடுத்து தான் கட்சியை வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
மறுசீரமைப்பில் கட்சியில் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இளைஞர் அணியை வலுப்பெறச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் நான்கு மண்டலங்களை பிரித்து நான்கு தலைவர்களை அறிவித்துள்ளோம். எல்லா மண்டலத்திலும் இளைஞர்களை வலுப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்த பணிகளை மேற்கொண்டுள்ளோம்.