கோவை: உலக புகையிலை தின விழிப்புணர்வு!

62பார்த்தது
உலக புகையிலைத் தினம் ஆண்டுதோறும் மே 31 அன்று கடைபிடிக்கப்படும் நிலையில், பொதுமக்கள் மத்தியில் புகையிலையின் தீங்குகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவமனை சார்பில் நேற்று விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பல் மருத்துவ மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். கோவை பந்தயசாலை பகுதியில் நடைபெற்ற இந்தப் பேரணியை எஸ். என். ஆர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு. சுந்தர் மற்றும் பந்தயசாலை காவல் நிலைய ஆய்வாளர் திரு. கந்தசாமி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் புகையிலை பயன்பாட்டின் தீமைகளை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாகவும், சைக்கிளிலும் சென்றனர். இந்தப் பேரணியின் மூலம் புகையிலை பயன்பாட்டின் அபாயங்கள் குறித்து மக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி