கோவை: கான்கிரீட் லாரி பழுதடைந்ததால் போக்குவரத்து நெரிசல்

77பார்த்தது
திருச்சி சாலையில் உள்ள அரசு மருத்துவமனை முன்பு நேற்று கான்கிரீட் லாரி பழுதடைந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுங்கம் பகுதியிலிருந்து மருத்துவமனை நோக்கி வந்த லாரி எதிர்பாராதவிதமாக நடுரோட்டில் நின்றுவிட்டது. இதனால் மருத்துவமனைக்கு வரும் வாகனங்கள் மற்றும் அவசர சிகிச்சை வாகனங்கள் உள்ளே செல்ல முடியாமல் திணறின. 

தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, பழுதடைந்த லாரியை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பொதுமக்களின் உதவியுடன் லாரியை சாலை ஓரமாக மாற்றிய பின்னர் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் மருத்துவமனைக்கு செல்லும் வழி மிகவும் நெரிசலாக இருந்தது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி