கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த யோகானந்தன் (31) கடந்த ஜூலை 1ம் தேதி இருசக்கர வாகன விபத்தில் கடுமையாக காயமடைந்து கே. ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஜூலை 4ம் தேதி மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். அவர் சகோதரி சகானா கே. ஜி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருவதால், குடும்பம் உடன் ஆலோசித்து யோகானந்தனின் இதயம், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. மருத்துவமனை தலைவர் ஜி. பக்தவச்சலம் மலர் வளையம் வைத்து நேற்று இறுதி மரியாதை செலுத்தினார்.