கோவை: இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் - 30 பேர் கைது

72பார்த்தது
கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் சூர்யபிரசாத்தை, மாநகர எல்லையை விட்டு ஆறு மாதங்களுக்கு வெளியேறுமாறு காவல்துறை உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் மனு அளித்திருந்த நிலையில், அதனை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி, மாநில இளைஞரணி தலைவர் ஓம்கார் பாலாஜி தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் செல்வபுரம் பகுதியில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். ஆனால் போலீசார் தடை விதித்த நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் தடையை மீறி கண்டன முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சூழ்நிலையில், ஓம்கார் பாலாஜி உள்ளிட்ட 30 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி