பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே ஓடும் நொய்யல் ஆற்று படித்துறையில் குப்பைகள் மற்றும் கழிவுகள் குவிந்து காணப்படுவதால் பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. திதி கொடுக்கும் முக்கிய தலமாக விளங்கும் இந்த படித்துறையில் சமீபத்திய மழையால் நீர்வரத்து அதிகரித்த நிலையில், பலர் குளிக்க வருகின்றனர். ஆனால், வேட்டிகள், துணிகள் உள்ளிட்ட கழிவுகளை அங்கேயே கழட்டி விடும் பழக்கம் காரணமாக பகுதி மாசுபட்டு வருகிறது. இதனால், புனிதத் தலத்தின் தூய்மையும் அழகும் பாதிக்கப்படுவதாகக் கூறும் பொதுமக்கள், உடனடியாக சுத்தம் செய்யவும், நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்கவும் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.