கோவை கே. ஜி. தியேட்டர் எதிரில் உள்ள டீ கடையில் நேற்று கேஸ் சிலிண்டர் கசிவால் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. உடனடியாக தகவல் பெற்ற உதவி ஆய்வாளர் கார்த்திக் ஐந்து போலீசாருடன் விரைந்து சென்று, காவல் நிலைய தீயணைப்பு கருவிகள் மூலம் தீயை கட்டுப்படுத்தினார்.
பந்தய சாலை காவல் ஆய்வாளர் கந்தசாமி விசாரணை நடத்தி, தீயணைப்புத்துறைக்கும் தகவல் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. போலீசாரின் விரைந்து செயல்பட்ட துரித நடவடிக்கையால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது.