கோவை: விவசாயிகள் மாநில மகாசபை கூட்டம்

3பார்த்தது
கோவை மாவட்டம் பேரூரில் உள்ள யாதவர் திருமண மண்டபத்தில், நாராயணசாமி நாயுடு விவசாய சங்கம் தலைமையில் SKM (NP) சார்பில் மாநில மகாசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
நொய்யல் ஆற்றை பாதுகாப்பது உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள், விவசாயிகள் இணைந்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தேவையை கூட்டத்தில் வலியுறுத்தினர். நிகழ்வில் SKM (NP) தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித் சிங் தல்லேவால், மாநில ஒருங்கிணைப்பாளர் பி. ஆர். பாண்டியன், பி. அய்யாக்கண்ணு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட தேசிய விவசாயத் தலைவர்கள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி