கோவை: மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரிக்கை!

1பார்த்தது
மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பல தொழிற்சங்கங்கள் ஒருமனதாக வலியுறுத்தின. கொடிசியாவில் நேற்று நடைபெற்ற இந்த சந்திப்பில் இந்திய தொழில் வர்த்தக சபை, டேக்ட், கோபமா, கிரில் தயாரிப்பாளர் நல சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்றன. கொடிசியா தலைவர் கார்த்திகேயன், மின் நிலை கட்டணம் 450% உயர்ந்ததால் தொழில்கள் இயக்க முடியாத நிலை,
கடந்த 3 ஆண்டுகளில் 10% தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. கட்டண உயர்வால் உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பு,
நிலை கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்,
டேக்ட் தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது, 50 கிலோ வரை கட்டணம் உயர்வு இல்லை என அரசு அறிவித்தாலும், 112 கிலோ வாட் வரை தளர்வுகள் வழங்க வேண்டும் கிரில் நல சங்க தலைவர் திருமலை ரவி, வாடகை, சம்பளம், மூலப்பொருட்கள் விலை உயர்வால் 25% கிரில் தொழில்கள் மூடப்பட்டுள்ளன, 5000 பேர் வேலை இழந்தனர். கோவையை பாதுகாக்கப்பட்ட தொழில்மண்டலமாக அறிவிக்க வேண்டும் மின் கட்டண உயர்வை எதிர்த்து மாநிலம் முழுவதும் உள்ள 50 தொழில் அமைப்புகள் முதலமைச்சரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி