கோவை, சூலூர் அருகே செலகரச்சல் பகுதியில், நேற்றுபல்லடம்–செட்டிபாளையம் சாலையில் பயணித்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விவசாயத் தோட்டத்தில் பாய்ந்து கவிழ்ந்தது. அப்பநாயக்கன்பட்டி புதூரைச் சேர்ந்த சரவணன் மற்றும் அவரது நண்பர் பயணித்த கார், எதிர்பாராதவிதமாக தடம்புரண்டதில் கார் தலைகீழாக கவிழ்ந்தது.
அருகிலிருந்தவர்கள் விரைந்து வந்து இருவரையும் மீட்டனர். எந்தவித காயமும் ஏற்படாதது ஆறுதலாகும்.
விபத்து குறித்து சுல்தான்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.