கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில், பாஜக வடக்கு மாவட்டம் சார்பில் தமிழக முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டது. கொங்கு மண்ணின் மைந்தன், முடிசூடா மன்னன் என்ற வாசகத்துடன் வெளியான இப்போஸ்டர், அண்ணாமலைக்கு கட்சித் தொண்டர்களிடையே நீடிக்கும் ஆதரவைத் தெளிவாகக் காட்டுகிறது. அவர் தற்போதைய தலைவர் அல்லாத போதிலும், அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து செயலாற்றி வருகின்றனர். கோவை மாவட்ட முழுவதும் அண்ணாமலைக்கு ஆதரவாக ஒட்டப்பட்டு இருக்கும் போஸ்டர் மற்ற கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.