கோவை: வாழைத்தார் ஆயிரம் ரூபாய் வரை விற்பனை

64பார்த்தது
மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் உள்ள காரமடை நால்ரோடு பிரிவில் உள்ள வாழைக்காய் ஏல மையம், வாரந்தோறும் செயல்பட்டு வருகிறது. இன்று நடைபெற்ற ஏலத்தில் மேட்டுப்பாளையம் தாலுகா மற்றும் சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 1,500 வாழைத்தார்களை கொண்டு வந்தனர். 

ஏலத்தில் 20-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டு விலை போட்டனர். கதளி கிலோ ரூ.25 முதல் ரூ.58 வரை, நேந்திரம் ரூ.20 முதல் ரூ.53 வரை விற்பனையானது. பூவன், செவ்வாழை, ரஸ்தாளி, தேன் வாழை, ரொபஸ்டா, மொந்தன், பச்சை நாடன் ஆகிய வகை வாழைகள் ஒரு தாருக்கு ரூ.150 முதல் ரூ.1,000 வரை விலை பெற்றன. விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் இது நல்ல வரவேற்பு பெற்ற ஏலமாக அமைந்தது.

தொடர்புடைய செய்தி