கோவை: 500 ரூபாயில் விபத்து காப்பீடு; அஞ்சல்துறை அழைப்பு

76பார்த்தது
கோவை: 500 ரூபாயில் விபத்து காப்பீடு; அஞ்சல்துறை அழைப்பு
அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டுக்கு ரூ. 500 பிரீமியத்தில், ரூ. 10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு திட்டம், ரூ. 700 பிரீமியத்தில் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு திட்டம் வழங்குகின்றன.

கோவை அஞ்சல் கோட்ட முதுநிலை அஞ்சல கண்காணிப்பாளர் சிவசங்கர் நேற்று இது குறித்து கூறியிருப்பதாவது, திட்டத்தில் 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனம் பயன்படுத்தி வெறும் 5 நிமிடங்களில் முற்றிலும் டிஜிட்டல் முறையில் இந்த பாலிசி வழங்கப்படுகிறது.

ரூ.10 லட்சம், ரூ. 15 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு, நிரந்தர முழு ஊனம் ஆகியவற்றுக்கு பாலிசி தொகையும், நிரந்தர பகுதி ஊனத்துக்கு ஊனத்தின் சதவிகிதம் அடிப்படையில் தொகையும் வழங்கப்படும். தொலைபேசி வாயிலாக கணக்கில்லா மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்ளும் வசதி. விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகள், பணம் திரும்ப பெறுதல். விபத்தினால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாட்களுக்கு, தினப்படி தொகை ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் வீதம், குறிப்பிட்ட நாட்களுக்கு பெறும் வசதி. பொதுமக்கள் தங்கள் தேவைக்கேற்ப, காப்பீடு திட்டத்தை தேர்ந்தெடுத்து, பாலிசி பயன்களை பெற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி