பாக்குத் தோட்டத்தை பங்கம் செய்த ஒற்றைக் காட்டு யானை

50பார்த்தது
கோவை, மேற்கு தொடர்ச்சி சிறுவாணி மலை அடிவாரத்தில் உள்ள சாடிவயல் அருகே மரக்காடு பகுதியில் உள்ள சாமிநாதன் என்பவர் தோட்டத்தில் புகுந்த ஒற்றைக் காட்டு யானை அங்கு இருந்த சுமார் 4 லட்சம் மதிப்புள்ள பாக்கு மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தி சென்று உள்ளது.

இது குறித்து சாமிநாதன் கூறும்போது: கடந்த சில மாதங்களாக இரண்டு தினங்களுக்கு ஒரு முறை கூட்டமாகவும் மற்றும் ஒற்றை காட்டு யானை அப்பகுதியில் உலா வருவதாகவும், இதை கண்காணிக்க ஒரு சில நேரங்களில் வரும் வனத் துறையினர் வந்து பார்வையிட்டு மட்டும் சென்று விடுவதாகவும், அவர்கள் சென்ற பிறகு அங்கு வரும் யானைகள் அப்பகுதியில் உள்ள பயிர்களை முற்றிலும் சேதப்படுத்தி செல்வதாகவும்,

இதனால் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டு வருவதாகவும், இதனால் பகுதியில் உள்ள விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் வேறு தொழில்களை தேடி நகரப் பகுதிக்கு செல்கின்றனர்.

இதே நிலை நீடித்தால் வரும் காலத்தில் முற்றிலுமாக இப்பகுதி விவசாயம் அழிந்து போய்விடும் என வேதனையுடன் தெரிவித்தார். மேலும் வனத்துறையினர் கண்காணிப்பை அதிகப்படுத்தி தீவிர படுத்தி அப்பகுதியில் வரும் காட்டு யானைகள் நிரந்தரமாக வராமல் தடுக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே எங்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டு விவசாயம் செழிப்படையும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி