கோவை: பங்கு சந்தை முதலீட்டில் வாலிபரிடம் ரூ. 17 லட்சம் மோசடி

52பார்த்தது
கோவை: பங்கு சந்தை முதலீட்டில் வாலிபரிடம் ரூ. 17 லட்சம் மோசடி
கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் பாபு (39). கடந்த நவம்பர் மாதம் இவரது வாட்ஸ்அப் எண் ஒரு புதிய குரூப்பில் இணைக்கப்பட்டது. அதில் பங்கு சந்தை முதலீடு தொடர்பாகவும், குறைந்த விலைக்கு பங்குகளை வாங்கி எவ்வாறு லாபம் பெறலாம் என விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பாபு பங்கு சந்தையில் முதலீடு செய்ய விரும்பி அதில் உள்ள லிங்கில் சென்று அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்தார்.

பின்னர் அவர் பிரபல நிறுவனத்தின் பங்குகளை வாங்கி விற்றதில் அவருக்கு முதலில் லாபம் கிடைத்தது. இதனை நம்பி அவர் சிறிது, சிறிதாக ரூ. 17 லட்சத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்தார். அதில் அவருக்கு லாபம் வந்தது போல் காட்டியுள்ளனர். ஆனால் அவரால் பணம் எடுக்க முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி