தொண்டாமுத்தூர்: காட்டு யானை, பன்றிகள் அட்டகாசம்!

60பார்த்தது
கோவை, தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரத்தில் 2, 000 ஏக்கருக்கு மேலான விவசாய நிலங்களில், விவசாயிகள் கடும் சிரமத்தில் உள்ளனர். காட்டு யானை, பன்றி தொல்லை காரணமாக மக்காச்சோள பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. ஆலாந்துறை அடுத்த செம்மேடு, முட்டத்துவயல் பகுதிகளில் விவசாயிகள் நடவு செய்த மக்காச்சோள பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நேற்று காட்டு யானை, பன்றி தொல்லை காரணமாக கடுமையாக சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இரவு நேரங்களில் விவசாய நிலங்களை காவல் காக்கும் அவல நிலையில் விவசாயிகள் உள்ளனர். அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டு யானைகளை வனத்துறை விரட்ட வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தொண்டாமுத்தூர் பகுதி விவசாயிகள் நேற்று கூறுகையில், காட்டு யானை, பன்றி தொல்லை காரணமாக விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி